12 அடி பள்ளத்தில் தவறி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு

தக்கலை அருகே 12 அடி பள்ளத்தில் தவறி விழுந்த ஆசிரியர் உயிரிழப்பு. போலீசார் விசாரணை;

Update: 2024-03-14 04:19 GMT

உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே மணலிக் கரையை சேர்ந்தவர் சேவியர் (51). அதே பகுதியில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு சேவியர் மண்டைக்காட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீடு நோக்கி புறப்பட்டார். இடையில் சிறிது நேரம் ஓய்வெடுக்க மணவாளக்குறிச்சி பாலத்தில் மோட்டார் சைக்கிளை  நிறுத்திவிட்டு, பாலத்தின் தடுப்பு சுவரில் ஏறி அமர்ந்துள்ளார்.      

Advertisement

அப்போது அவர் நிலை தடுமாறி அங்கிருந்து 12 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தார். இரவு நேரம் என்பதால் இதை யாரும் கவனிக்கவில்லை. நேற்று காலை அங்கு மோட்டார் சைக்கிள் மட்டும் தனியாக நிற்ப்பதை பார்த்த பொதுமக்கள் மணவாளக்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.  உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, சேவியர் பள்ளத்தில் விழுந்ததில் மூக்கில் படுகாயம் அடைந்து உயிரிழந்தது தெரிய வந்தது.      

உடனே போலீசார் உடலை மீட்டு சேவியர் வீட்டுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து உடலை போலீசார் பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News