புதிய அரசாணையை ரத்து செய்யகோரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்!

இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான புதிய அரசாணையை ரத்து செய்யக்கோரி, சாத்தான்குளத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-01-06 02:35 GMT

 இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கான புதிய அரசாணையை ரத்து செய்யக்கோரி, சாத்தான்குளத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். 

மாநில அளவிலான பணிமூப்பு அடிப்படையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு அரசு வெளியிட்டுள்ள புதிய அரசானையான 243-ஐ ரத்து செய்ய வேண்டும். புதிய பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும்.  ஓப்படைப்பு விடுப்பு ஊதியம் தர வேண்டும். எமிஸ் பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. 

சாத்தான்குளம் வட்டக்கிளை சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சாத்தான்குளம் வட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். வட்ட செயலர் அருள்ராஜ், மாவட்ட துணைத் தலைவர் தங்கராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒய்வு பெற்றோர் பிரிவு வட்டத் தலைவர் பால்பாண்டி, ஒய்வு பெற்றோர் பிரிவைச் சேர்ந்த ஜெகதீசபாண்டி, ராஜன், சாமுவேல் ஆகியோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.  இதில் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வக்குமார், பட்சிராஜன், ரங்கிள், அந்தோணி அற்புதராஜ், ஜெகதீஷ், லூகிஸ், மகளிர் பிரிவைச் சேர்ந்த விண்ணரசி, தொம்மை ரெக்ஸிலின், மேரி அமுதா, லில்லி புஷ்பம், சகாய செரினா, உள்ளிட்ட 250 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். வட்டார பொருளாளர் அந்தோணி யூஜின் நன்றி கூறினார்.

Tags:    

Similar News