கோரிக்கைகளை வலியுறுத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

தேனியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2024-06-14 16:21 GMT

பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .

இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன ஆண்டுதோறும் ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்,

ஆசிரியர்களுக்கு கட்டணம் இல்லா மருத்துவ சிகிச்சையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கும் சலுகைகள் போல அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்களுக்கும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கல்வி சாரா பணிகளில் ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது என்றும் முதுகலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தனியாக குழு அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு பொதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

Tags:    

Similar News