தேக்கு மரம் கடத்தல்-2 பேர் கைது

குற்றாலம் அரசு காப்புகாட்டில் தேக்கு மரத்தை வெட்டி கடத்திய இருவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2024-02-19 02:04 GMT
கைது செய்யப்பட்டவர்கள் 

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் உள்ள அரசு காப்புகாட்டில் ஏராளமான அரிய வகை மரங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த அரசு காப்பு காட்டில் உள்ள தேக்கு மரங்கள் வெட்டப்பட்டுள்ளதாக குற்றாலம் வனத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், குற்றாலம் வனத்துறையினர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அரசு காப்புகாட்டில் உள்ள தேக்கு மரத்தை வெட்டி கடத்திய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், பழைய குற்றாலம் அருகே உள்ள ஆயிரப்பேரி பகுதியை சேர்ந்த கண்ணதாசன் (வயது 36) என்ற நபர் தேக்கு மரத்தை வெட்டியதாக விசாரணையில் தெரியவந்த நிலையில், உடனடியாக வனத்துறையினர் கண்ணதாசனை கைது செய்து விசாரணை செய்தனர். அப்போது, அவரும், அவருடன் சேர்ந்து அதே பகுதியை சேர்ந்த காட்டுராசா (வயது 35) என்ற நபரும் தேக்கு மரத்தை வெட்டி சட்டவிரோதமாக கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, அவர்கள் இருவரையும் கைது செய்த வனத்துறையினர் அவர்களை செங்கோட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்பு ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News