கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா சப்ளை - வாலிபர் கைது

அம்மாண்டி விளையருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வதற்காக காத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-06-26 06:53 GMT

பைல் படம் 

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ஐயப்பன் தலைமையிலான போலீசார் நேற்று அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அம்மாண்டி விளை  அருகே கட்டைக்காடு பகுதியில் உள்ள தனியார் கல்லூரியின் பின்பக்கத்தில் ஒரு வாலிபர் நீண்ட நேரமாக அங்கும் இங்கு நடமாடிக் கொண்டிருந்ததை கண்டனர்.   அருகில் சென்று அந்த நபரை பிடித்து விசாரித்த போது, அவர் கடியப்பட்டணம் பகுதி அந்தோனியார் தெருவை சேர்ந்த சஜித் (36) என்பது தெரியவந்தது.

Advertisement

இதையடுத்து அவரின் உடைமைகளை சோதனை செய்தபோது 45 கிராம் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் கல்லூரி மாணவர்கள் வகுப்புகள் முடிந்து வெளிவரும் போது அவர்களுக்கு  விற்பனை செய்வதற்காக கொண்டு வந்ததாக தெரிவித்தார். இதையடுத்து அவரை  கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும் கஞ்சாவை எங்கிருந்து வாங்கினார் ?  கஞ்சா விற்பனையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா?  என்பதை குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News