உடல் நலக் கோளாறு காரணமாக வாலிபர் தற்கொலை
திண்டுக்கல் அருகே குளத்தூர் அண்ணா நகர் பகுதியில் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;
Update: 2024-05-09 09:38 GMT
தற்கொலை
திண்டுக்கல் அருகே குளத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த போதராஜ் உடல் நலக் கோளாறு காரணமாக புதன்கிழமை மதியம் 12:30 மணியளவில் வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தாலுகா காவல் நிலைய போலீசார் போதராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, மேற்படி சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.