கோபுரத்தில் இருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில், மின்விளக்கு கோபுரத்தில் பழுது நீக்க சென்ற வாலிபர் கீழே விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-01-12 10:11 GMT
நாகராஜன்

குமரி மாவட்டம் , சாமிதோப்பு அருகே உள்ள சாஸ்தான்கோவில் சேர்ந்தவர் ராஜமணி மகன் நாகராஜன் (27). எலக்ட்ரீசியன் வேலை செய்யும் இவர், ஒலிபெருக்கி நிலையத்திற்கும் வேலை சென்று வந்துள்ளார்.   இந்த நிலையில் அதே பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இரண்டு நாட்களுக்கு திருவிழா நடைபெற இருந்தது. இதற்காக அலங்கார வளைவுகள், மின்விளக்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் மின்விளக்கு  அலங்கார கோபுரம் ஒன்று  திடீரென பழுதானதால் நேற்று அதனை சரி செய்ய நாகராஜன் சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மின்விளக்கு கோபுரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதனால் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம்  அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே நாகராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நாகராஜனுக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்க இருந்த நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றது குடும்பத்தினரை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக தென்தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News