இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுக்காததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை அருகே தந்தை இருசக்கர வாகனம் வாங்கி கொடுக்காததால் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-06-12 10:19 GMT

தற்கொலை 

தக்கலை கீழகல்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மகன் அபிஷ்.தொழிலாளி. கிருஷ்ணன் வேலைக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் படுக்கை அறையில் அபிஷ் தூக்கில் தொங்குவதை அதிர்ச்சியடைந்தார். கண்டு இதனைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அபிஷை மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்தடாக்டர்கள், அபிஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அபிஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக கிருஷ்ணன் தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

முதல் கட்ட விசாரணையில் தற்கொலை செய்து கொண்ட அபிஷ் அவரது பெற்றோரிடம் தனக்கு மோட்டார் சைக்கிள் வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு சில நாட்கள் கழித்து வாங்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர். இதனால் மனவேதனையில் இருந்த அபிஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News