கார் மோதி வாலிபர் பலி!
கார் மோதிய விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
Update: 2024-04-05 04:40 GMT
திருமயம் தாலுகா திருவானைக்காவன் பட்டியை சேர்ந்தவர் பிரகாஷ்(27). இன்னும் திருமண மாகவில்லை. வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். இந்நிலையில் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த பிரகாஷ் நேற்று காலை பைக்கில் நமணசமுத்திரத்தில் இருந்து லெனாவிலக்கு நோக்கி வந்தபோது எதிரே வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே பிரகாஷ் இறந்தார். நமணசமுத்திரம் போலீசார் வழக்குப்பதிந்து கார் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.