டிராக்டர் மோதி வாலிபர் பலி

பெரியமணலில் டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.;

Update: 2023-12-14 14:15 GMT

பெரியமணலில் டிராக்டர் மோதி வாலிபர் பலியானார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
டிராக்டரில் மோதி வாலிபர் பலி: பெரியமணலி பலக்காரன்காடு பகுதியில் டிராக்கடரில்மோதி வாலிபர் உயிரிழந்தார். எலச்சிபாளையம் அருகேயுள்ள பெரியமணலி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி48. இவரது மகன் ராஜா18 வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். ராஜா நேற்றுமுன்தினம் இரவு 11.15மணிக்கு அவரது ஹோண்டா ஸ்பிலிண்டர் இருசக்கர வாகனத்தில் வையப்பமலையில் இருந்து பெரியமணலிக்கு வரும்போது, எதிரே வந்த டிராக்டர்மீது மோதினார். இதில், தலை மற்றும் காலில் பலத்த அடிபட்டது. ஆம்புலன்ஸ் மூலம் திருச்செங்கோடு அரசுமருத்துவமனையில் சென்று பார்க்கும்போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, எலச்சிபாளையம் போலீசார் வழக்குபதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News