மதுபோதை தகராறில் வாலிபருக்கு கத்திக்குத்து

பனமரத்துப்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் நண்பரை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய மற்ற இரு நண்பர்களை போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2024-04-30 08:56 GMT

பைல் படம் 

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே தம்மநாய்க்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன்(32). இவரும், கொண்டலாம்பட்டியைச் சேர்ந்த சேகர் (30), தாசநாய்க்கன்பட்டி சின்னமணி(28) ஆகியோரும் நண்பர்கள். தனியார் பட்டுத்தறி தொழிற்சாலையில் ஒன்றாக பணியாற்றி வரும் இவர்கள், விடுமுறை நாட்களில், ஒன்றாக சேர்ந்து மது அருந்துவது வழக்கம். நேற்று முன்தினம், நாழிக்கல்பட்டி ஓடை அருகே மது அருந்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்து கத்தியை எடுத்து முருகேசனை சரமாரியாக குத்தினர். ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்தார். இதையடுத்து, இருவரும் அங்கிருந்து தப்பியோடினர். அருகில் இருந்தவர்கள் காயமடைந்த முருகேசனை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து, தப்பியோடிய இருவரையும் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News