நடந்து சென்ற ஆசிரியையிடம் கத்தி முனையில் வாலிபர்கள் வழிப்பறி
திருப்பூரில் நடந்து சென்ற ஆசிரியையிடம் கத்தியை காட்டி மிரட்டி, வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் காங்கேயம் சாலை முத்தனம்பாளையம் பொன்முத்து நகர் 2வது வீதியில் சேர்ந்தவர் பரமேஸ்வரன். இவரது மனைவி சந்திரகுமாரி (வயது 36) இவர் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். இந்நிலையில் நேற்று பள்ளி வேலையை முடித்துவிட்டு நல்லூரில் இருந்து முத்தனம்பாளையம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்பொழுது மோட்டார் சைக்கிள் வந்த இரண்டு வாலிபர்கள் திடீரென்று சந்திரகுமாரியை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த கைப்பையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றனர். அதில் பணம், செல் போன், மற்றும் ஏடிஎம் கார்டு, வெள்ளி கொலுசு போன்ற பொருட்கள் வைத்திருந்தார். அதிர்ச்சியடைந்த சந்திரகுமாரி இது குறித்து நல்லூர் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். புகார் அடிப்படையில் நல்லூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தலைமையில் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தல் போலீசார், ஏற்கனவே வழிப்பறியில் ஈடுபட்டிருந்த இரண்டு குற்றவாளிகள் என்பது தெரிய வந்தது. உடனடியாக போலீசார் துரிதமாக நடவடிக்கை எடுத்து செவந்தபாளையம் பகுதியில் பதுங்கி இருந்த திருப்பூர் பகுதியைச் சேர்ந்த ஆதிசக்தி மணி (வயது 22 )மற்றும் வினோத்குமார் (19 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து கைப்பையில் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனர். துரிதமாக பணியாற்றி குற்றவாளியை கைது செய்த போலீசாருக்கு மாநகர கமிஷனர் பிரவீன் குமார் அபினயு வெகுவாக பாராட்டினார்.