டூவீலரை திருட முயன்ற வாலிபர்கள்

அயோத்தியாப்பட்டணம் அருகே திருநங்கை வீட்டில் டூவீலரை திருட முயன்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-06-17 08:34 GMT

பைல் படம்

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள சின்னகவுண்டாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சத்யா (வயது 32). திருநங்கையான இவர் அதே பகுதியில் உள்ள அவரது தாயார் வீட்டில், தோழி ராஜாஸ்ரீ உடன் தங்கியுள்ளார். நேற்று அதிகாலை 4 மணியளவில் திடீரென அவரது வீட்டின் வெளியே சத்தம் கேட்டுள்ளது. அப்போது ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தபோது, சத்யாவின் ஸ்கூட்டரை 3 பேர் திருட முயன்றனர். இதையடுத்து சத்யா, ராஜாஸ்ரீ இருவரும், வாலிபர் ஒருவரை பிடித்து காரிப்பட்டி போலீசில் ஒப்படைத்துள்ளனர்.

Advertisement

இதையடுத்து போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அவர் மேட்டுப்பட்டி தாதனூர் பகுதியைச் சேர்ந்த சூர்யபிரகாஷ் என்பதும், தனது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், சமரசம் ஆகியோருடன் ஸ்கூட்டரை திருட முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து திருநங்கை சத்தியா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சூர்யபிரகாஷ், சுரேஷ், ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான சமரசத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News