நாமக்கல் வாராஹி கோவிலில் தேய்பிறை பஞ்சமி வழிபாடு!

தேய்பிறை பஞ்சமி தினமான இன்று வாராஹி அம்மனை தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்தால் பிரார்த்தனைகள் நிறைவேறும். தீராத கடன், வழக்கு பிரச்சினை தீரும்.

Update: 2024-06-26 09:07 GMT

வாராஹி அம்மன் 

நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை எம்.ஜி.ஆர்  நகரில் (இரயில் நிலையம் அருகில்) தங்காயி மற்றும் ஸ்ரீ மஹா வாராஹி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை மற்றும் வளர்பிறை பஞ்சமி திதி அன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். இன்று (ஜூன் 26) புதன்கிழமை மாலை சிறப்பு வழிபாடு மற்றும் அபிஷேகம் நடைப்பெறும். மேலும் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேற தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்யலாம் என்று கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Tags:    

Similar News