சாயர்புரம் சைனிக் பள்ளியில் டெலஸ்கோப் பயிற்சி!

சாயர்புரம் விசாகா சைனிக் பள்ளியில் மாணவர்களுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-01-06 02:12 GMT

சாயர்புரம் விசாகா சைனிக் பள்ளியில் மாணவர்களுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி சார்பில் சாயர்புரம் விசாகா சைனிக் பள்ளியில் வானியல் குறித்த கருத்தரங்கில் மாணவர்களுக்கு தொலைதூர பொருட்களை டெலஸ்கோப்பில் பார்வையிட பயிற்சி அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு கேப்டன் முத்துவேல் தலைமை வகித்தார். கோவில்பட்டி அஸ்ட்ரோ கிளப் தலைவர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அஸ்ட்ரானமி சயின்ஸ் சொசைட்டி நிர்வாகி முத்துசாமி, நெல்லை அஸ்ட்ரோ கிளப் கருத்தாளர் சாமிதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு வானியல் குறித்தும்,டெலஸ்கோப் மூலம் தொலைதூரப் பொருட்களை பார்வையிடுவது குறித்தும் பயிற்சி அளித்தனர். இதில் பள்ளி ஆசிரியர்கள் உமா,கீதாஞ்சலி,சாந்தி ஜோயல், கனிராஜ், சாரோன் உள்பட கலந்து கொண்டனர். முன்னதாக ஆசிரியர் வெங்கடேஷ் வரவேற்றார். நிறைவாக ஆசிரியர் பிரசாந் நன்றி கூறினார்.

Tags:    

Similar News