காருடையாம்பாளையத்தில் கோவில் கும்பாபிஷேகம்

காருடையாம்பாளையத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-11-10 09:05 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

 கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, காருடையாம்பாளையம் கிராமத்தில் நான்கு எல்லையில் அமைந்து அருள் பாலித்து வரும் ஸ்ரீ விநாயகர் , ஸ்ரீ தங்காயி அம்மன், ஸ்ரீ கருப்பண்ணசாமி திருக்கோவிலில் நூதன ஆலய ஜூர்னோத்தர அஸ்டபந்தன கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கரியாம்பட்டி, ராசாம்பாளையம், வள்ளிபுரம், ஆண்டிப்பட்டி கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். புகலூர் நகராட்சி தலைவர் குணசேகர் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்று அதிகாலையிலேயே சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று அலங்காரமும் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, யாகவேள்வியில் யாகங்கள் வளர்க்கப்பட்டு, புனித நீர் கோவில் கலசத்தில் சிவாச்சாரியார்கள் ஊற்றி கும்பாபிஷேக விழாவை சிறப்பாக நடத்தினர்.

நிகழ்ச்சியை தொடர்ந்து மகா தீப ஆராதணையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்ற பக்தர்கள், பொதுமக்களில் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News