கோவில் கும்பாபிஷேக விழா

பழைய கஞ்சமனூர் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டு வந்தனர்.;

Update: 2024-03-05 09:59 GMT

 கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, உப்பிடமங்கலம் பேரூராட்சிக்கு உட்பட்ட, பழைய கஞ்சமனூரில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ மாரியம்மன் ஆலயம் புதுப்பிக்கப்பட்டு மார்ச் 7ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

இதனைத் தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்காக, இன்று கரூர் மாவட்டம், மாயனூர், மதுக்கரை செல்லாண்டியம்மன் ஆலயம் அருகே உள்ள, காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து, உப்பிடமங்கலம் பகுதியில் கோவில் தர்மகர்த்தா தலைமையில் ஒன்று கூடி, தாரை தப்பட்டைகள் முழங்க, ஒயிலாட்டத்துடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

Advertisement

இந்த நிகழ்ச்சியில், 5- ஊர் கொத்துக்காரர்கள், ஊர் பொதுமக்கள், பக்தர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு தீர்த்தம் எடுத்து வந்தனர். மேலும், கோவில் அருகே நடன கலைஞர்கள் பங்கேற்ற ஒயிலாட்டம் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. மேலும்,நாளை 5- ஊர் பொதுமக்கள் பங்கேற்கும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற உள்ளது் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News