கோவில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது.

Update: 2023-12-07 12:31 GMT

 ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா நடந்தது.

.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட மணிமுத்தாற்று கிழக்கு திசையில் காமதேனு தீர்த்தத்தின் கிழக்கு கரையில் அமர்ந்து அருள் பாலிக்கும் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மன் திருக்கோயில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக கோவில் முன்பு உள்ள யாசாலையில் கடந்த ஒன்னாம் தேதி வெள்ளிக்கிழமை முதல் திருவிளக்கு பூஜை சரஸ்வதி ஹோமம் தனலட்சுமி பூஜை மறுநாள் நவக்கிரக ஹோமம் அதனை தொடர்ந்து ஸ்ரீதேவி மகாத்மியம் பாராயணம் நடந்தது. தொடர்ந்து இன்று நான்காம் கால யாகசாலை பூஜையுடன் துவங்கியது. யாத சாலையில வைத்து பூஜிக்கப்பட்ட குடிநீர் சிவாச்சாரியார்களால் தலையில் சுமந்து தடம் புறப்பாடு நடைபெற்று புனித நீரானது கோவில் கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த கிராம மக்கள் ஏளனோர் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்று சென்றனர்

Tags:    

Similar News