அனுமதி இன்றி வெட்டப்பட்ட கோயில் மரங்கள் - வட்டாட்சியர் நடவடிக்கை

சிவன் கோயில் சுற்று சுவர் அருகில் அரசு அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்கள் வட்டாட்சியர் நடவடிக்கை

Update: 2023-12-06 05:46 GMT
சிவன் கோயில் சுற்று சுவர் அருகில் அரசு அனுமதி இல்லாமல் வெட்டப்பட்ட மரங்கள் வட்டாட்சியர் நடவடிக்கை
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்து சமய அறநிலைய துறைக்கு பாதிக்கப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சாத்தூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

மேலும் பிரதோஷம் மற்றும் பௌர்ணமி நாட்களில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வது வழக்கம். மேலும் இந்த கோவிலை சுற்றிலும் 50 ஆண்டுகளுக்கு மேலான வளர்த்த 10க்கு மேற்பட்ட வேம்பு மற்றும் பல்வேறு வகையான மரங்கள் உள்ளன.

தற்போது சிவன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடக்க இருக்கும் சூழ்நிலையில் சிவன் கோவில் நிர்வாகத்தினர் அரசு அனுமதி இல்லாமல் கோவிலை சுற்றி உள்ள சுற்று சுவரின் அருகில் இருந்த மூன்று வேப்பமரம் மற்றும் புங்கை மரம் என 10க்கு மேற்பட்ட மரங்களை வெட்டி உள்ளனர்.

மேலும் கோவிலை சுற்றி உள்ள பத்துக்கு மேற்பட்ட மரங்களை வெட்டுவதற்கு தயார் நிலையில் இருந்த போது சமூக ஆர்வலர்கள் சாத்தூர் தாசில்தாருக்கு தகவல் தெரிவித்து அடிப்படையில் தாசில்தார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் விரைந்து வந்து மரங்களை வெட்டாமல் தடுத்து நிறுத்தினர்.

மேலும் அனுமதியின்றி வெட்டப்பட்ட 6 டன்னுக்கு அதிகமான மரத் துண்டுகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் அரசு அனுமதி இல்லாமல் மரங்கள் வெட்டிய சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News