தென்காசி: வாக்கு எண்ணும் மையத்தில் செல்போன், ஸ்மார்ட் வாட்ச்க்கு தடை
வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் கமல் கிஷோர் தெரிவித்தார்.
Update: 2024-06-04 01:48 GMT
தென்காசி மாவட்டம் தென்காசி ஆட்சியர் கமல் கிஷோர் கூறியதாவது இன்று ஓட்டு எண்ணும் மையத்தில் செல்போன், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்களும் அனுமதிக்கப்பட மாட்டாது. வேட்பாளர்களின் முகவர்கள் பால்பாயிண்ட் பேனா, பென்சில், பேப்பர், சிறிய நோட் ஓட்டுப்பதிவு நாள் இன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலரால் வழங்கப்பட்ட 17 சி படிவம் ஓட்டு எண்ணும் மையத்திற்கு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர் என்றார் தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.