விழுப்புரத்தில் தென்பெண்ணை ஆற்று திருவிழா கோலாகலம்
விழுப்புரம் மாவட்டத்தில் சின்ன கள்ளிப்பட்டு, பிடாகம் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றுப்பகுதிகளில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
Update: 2024-01-19 11:42 GMT
விழுப்புரம் மாவட்டத்தில் சின்ன கள்ளிப்பட்டு, பிடாகம் உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றுப்பகுதியில் ஆற்றுத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த ஆற்றுதிருவிழாவில் விழுப்புரம், கடலூர், பண்ருட்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான கிராமங்களிருந்தும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து ஆற்று திருவிழாவை கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர் பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்ட போலீசார் 1000-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளனர்.