டென்சிங் நார்கே விருது பெற 31 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

டென்சிங் நார்கே விருது பெற இணையதளம் மூலம் வரும் 31 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.

Update: 2024-05-23 13:44 GMT

டென்சிங் நார்கே விருது பெற இணையதளம் மூலம் வரும் 31 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.


மத்திய அரசின் சார்பாக, தேசிய அளவில் வீர, தீர மிக்க செயல்புரிந்தவர்களுக்கு “டென்சிங் நார்கே விருது” ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு துணிச்சலான நடவடிக்கைகள் நிலம், நீர் மற்றும் ஆகாயம் (காற்று) மண்டலத்தில் செய்தமைக்காக வாழ்நாள் சாதனை விருது வழங்கப்பட உள்ளது. மேற்காணும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் மற்றும் முக்கிய விவரங்களை இந்திய அரசு இணையதள முகவரியான http://awards.gov.in மூலம் வரும் 31ஆம் தேதிக்-க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News