சறகுகள் மற்றும் மரக்கழிவுகளில் பயங்கர தீ விபத்து

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பயன்பாடின்றி பழுதாகி பாழடைந்து கிடக்கும் அரசு ஊழியர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் பின்புறம் பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த சறகுகள் மற்றும் மரக்கழிவுகளில் பயங்கர தீ விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-04-29 11:40 GMT

தீ விபத்து

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே பயன்பாடின்றி பழுதாகி பாழடைந்து கிடக்கும் அரசு ஊழியர்கள் அடுக்குமாடி குடியிருப்பு கட்டடம் உள்ளது. இந்நிலையில் இந்த கட்டடத்திற்கு பின்புறம் குவித்து வைக்கப்பட்டிருந்த சறுகுகள் மற்றும் மரக்கழிவுகளில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தியானது கொழுந்து விட்டு எரிந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற புதுக்கோட்டை தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரம் போராடி தண்ணீர் பீச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள வர்த்தக வணிக நிறுவனங்கள், நகராட்சி பூங்கா, சாலையோர கடைகள், விடுதிகள் ஆகியவற்றிற்கு தீ பரவாமல் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் இந்த தீ விபத்து சமூகவிரோதிகளால் ஏற்படுத்தப்பட்டதா அல்லது வேறு ஏதும் காரணமா என்று புதுக்கோட்டை நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News