நாகராஜா கோவில் தை திருவிழா நாளை தொடக்கம் 

நாகர்கோவில் நாகராஜா கோவிலில் நாளை 18ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி தைத்திருவிழா நடைபெற உள்ளது.

Update: 2024-01-17 03:54 GMT
நாகராஜா கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா நாளை 18ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடக்கிறது. நாளை காலை 7.30 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. கொடியை ஸ்ரீதரன் நம்பூரி ஏற்றி வைக்கிறார். மாலை 5 மணிக்கு மங்கள இசை,இரவு 7 மணிக்கு மண்டகப்படி, 7.20 மணிக்கு சொற்பொழிவு,  தொடர்ந்து சாமி புஷ்பக விமானத்தில் எழுந்தருளல் நடக்கிறது.

விழாவை ஒட்டி தினமும் மாலையில் சொற்பொழிவு, கலை நிகழ்ச்சி நடக்கிறது. தினமும் இரவு 8.30 மணிக்கு சுவாமி பல்வேறு விமானத்தில் எழுந்தருளல் நிகழ்ச்சிகள் நடக்கிறது.      

 வருகிற 26 ஆம் தேதி ஒன்பதாம் திருவிழா அன்று காலை 7.30 மணிக்கு திருத்தேர்வடம் தொட்டு இழுத்தல் நடக்கிறது. தேரோட்டத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார். இரவு 9 மணிக்கு சப்த வர்ணம் நடக்கிறது. 27 ஆம் தேதி பத்தாம் திருவிழா நிகழ்ச்சியில் ஸ்ரீ நாகராஜ கோயில் தெப்பக்குளத்தில் ஆராட்டு நடக்கிறது. ஒழுகினசேரி ஆறாட்டுத் துறையில் இருந்து இரவு 7 15 மணிக்கு சுவாமி எழுந்தருள் நிகழ்ச்சி நடக்கிறது.

Tags:    

Similar News