சென்னிமலையில் தைப்பூச தேரோட்டம்
சென்னிமலையில் நடந்த தைப்பூச தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.;
Update: 2024-01-26 07:21 GMT
தேரோட்டம்
ஈரோடு மாவட்டம் சென்னிமலை சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இம்முருகன் கோயிலில் ஆண்டுதோறும் தை மாதத்தில் தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் தேர்முட்டியில் இருந்து தொடங்கப்பட்டது.மேள தாளங்கள் முழங்க சுப்பிரமணிய சுவாமி இருந்த தேரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை பயபக்தியுடன் வடம் பிடித்து இழுத்தனர்.மேலும் பக்தர்கள் காவடி நடனம்,சலங்கை நடனம் உள்ளிட்டவர்கள் ஆடி மகிழ்ந்தனர்.தேர்முட்டியில் தொடங்கிய தோரோட்டமானது கிழக்கு ராஜ வீதியில் தொடங்கி தெற்கு ராஜ வீதியில் நிறுத்தப்பட்டது.தேரோட்டத்தில் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கின்றனர்.