தைப்பூச திருவிழா நிறைவு
திண்டுக்கல் மாவட்டம், பழனியில் நாளையுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெற உள்ளது.
Update: 2024-01-27 09:50 GMT
பழனியில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் மற்றும் தைப்பூசத் தேரோட்டம் ஆகியவை முடிந்த நிலையில் 10ஆம் நாள் திருவிழாவான நாளை மாலை தெப்பத் தேரோட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து, இரவு கொடியிறக்கத்துடன் தைப்பூச திருவிழா நிறைவடைகிறது. தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை சென்று சாமிதரிசனம் செய்துவருகின்றனர்.