பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம்
உத்திரமேரூர் அருகே பெருநகரில் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் தைப்பூச கொடியேற்றம் நடைபெற்றது.;
Update: 2024-01-19 03:49 GMT
பஞ்சமூர்த்திகள் புறப்பாடு
காஞ்சிபுரம் - வந்தவாசி சாலை, உத்திரமேரூர் ஒன்றியம், பெருநகரில், பட்டுவதனாம்பிகை உடனாகிய பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடப்பு ஆண்டுக்கான தைப்பூச விழா நேற்று துவங்கியது. விழாவையொட்டி நேற்று, காலை 6:00 மணிக்கு பின் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றினர். அதை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடந்தது. இரவு சிம்ம வாகனத்தில் எழுந்தருளிய பிரம்மபுரீஸ்வரர் வீதியுலா வந்தார். தைப்பூச விழாவின், ஏழாம் நாள் உற்சவமான வரும் 23ல், காலை தேரோட்டமும், 25ல் காலை, அறுபத்து மூவர் மகா உற்சவமும் நடக்கிறது. தைப்பூச விழாவில், பிரபல உற்சவமான செய்யாற்றில், 22 ஊர் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் தைப்பூச தரிசன காட்சி ஜன.,26ல் நடக்கிறது."