தைப்பூசம் : மையூரநாதர் ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம்
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாயூரநாதர் ஆலயத்தில் சுப்ரமணியர் சுவாமிக்கு பக்தர்கள் பால்குடம் காவடிகள் எடுத்து வந்து நேர்த்திகடன் செலுத்தினர்.
Update: 2024-01-26 07:11 GMT
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மயூரநாதர் சுவாமி கோயிலில் உள்ள ஆறுமுகர் சுவாமி மற்றும் குமரக்கட்டளை வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு தைபூசத்தை முன்னிட்டு காவடி திருவிழா நடைபெற்றது. கூறைநாடு ஈவேரா தெரு, கஸ்தூரிபாய் தெரு உட்பட நகரின் பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் பால்குடம் எடுத்து பால் காவடி, பன்னீர்காவடி, புஷ்பகாவடி, மற்றும் அலகு காவடி குத்தி நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாள வாத்தியங்கள் முழங்க மாயூரநாதர் கோயிலை வந்தடைந்தனர். கோயிலில் பிரகாரங்களை சுற்றி வந்து ஆறுமுகர் மற்றும் குமரக்கட்டளை சுப்ரமணியர் சன்னதிகளின் முன்பு பக்தி பரவசத்துடன் மெய்சிலிர்க்க நடனமாடி காவடியை இறக்கி வைத்து தங்கள் நேர்த்திகடனை செலுத்தினர். தொடர்ந்து ஆறுமுகர் மற்றம் குமரக்கட்டளை சுப்ரமணியர் சுவாமிக்கு பக்தர்கள் கொண்டுவ ந்த பாலால் அபிஷேகம் செய்ய்பட்டு மகாதீபாரதனை நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு மேற்கொண்டனர்