தாளையடி கோட்டை காரையா அய்யனார் கோவில் கும்பாபிஷேகம்

ராமநாதபுரம், தாளையடி கோட்டை காரையா அய்யனார் ஆலய கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-03-08 02:14 GMT

ராமநாதபுரம் மாவட்டம், நயினார் கோவில் அருகே தாளையடி கோட்டை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ காரையா அய்யனார் ஆலய கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த வாரம் மங்கள இசையுடன் தொடங்கிய கும்பாபிஷேக விழாவானது விக்னேஸ்வர பூஜை,கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு ஹோமங்களுடன் யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டது.

தொடர்ந்து மூன்று நாட்கள் யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று காலை ஆறாம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மஹாபூர்ணாகுதி தீபாராதனை காண்பிக்கப்பட்டது.பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய குடங்கள் கோயிலை வலம் வந்து புதிதாக கட்டப்பட்ட நுழைவாயில் மற்றும் கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு காரையா அய்யனாருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு விஷேச தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

Similar News