நாமக்கல்: தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சி வேட்பாளர் மருத்துவர் எழில்செல்வன் வேட்புமனு தாக்கல்!

தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் சார்பில் நாமக்கல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மருத்துவர் ப. எழில் செல்வன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.;

Update: 2024-03-25 17:10 GMT

வேட்புமனு தாக்கல்

தமிழக மக்கள் தன்னுரிமைக் கட்சியின் சார்பில் நாமக்கல் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் மருத்துவர் ப. எழில் செல்வன் வேட்பு மனுவை நாமக்கல் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான உமாவிடம் வழங்கினார். இந்த நிகழ்வில் கட்சியின் நிறுவனர் நல்வினை செல்வன், பொதுச் செயலாளர் ஆர். பி. ஜனார்த்தனம், தலைமை ஒருங்கிணைப்பாளர் இளையராஜா முத்துவேல், கட்சியின் பொருளாளர் சி. பொறியாளர் சிவலிங்கம்,மாநிலத் துணைத் தலைவர் ராஜேஷ், சேலம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கட்சியின் மாநில- மாவட்ட - நகர- ஒன்றிய நிர்வாகிகள் பலரும் வேட்பாளர் மருத்துவர் எழில் செல்வன் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை திரண்டு வந்தனர்.
Tags:    

Similar News