திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன்

தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுளார்.;

Update: 2024-03-20 09:23 GMT

தேனி மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுளார்.


அதிமுகவின் விசுவாசியாகவும், ஜெயலலிதா போட்டியிடுவதற்கு வசதியாக தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தவர் என அறியப்பட்டவர் தங்க தமிழ்ச்செல்வன் 2001 ஆம் ஆண்டு அதிமுக சார்பில் தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்வாகினார். 2001 ஆம் ஆண்டு ஊழல் வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது பின்னர் 2002 ஆம் ஆண்டு வழக்கிலிருந்து விடுதலை ஆன பிறகு ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா போட்டியிடுவதற்காக தன்னுடைய எம்எல்ஏ பதவியை தங்க தமிழ்ச்செல்வன் ராஜினாமா செய்தார்.

இதனால் அதிமுகவின் தீவிர விசுவாசியாக அறியப்பட்டார் தங்க தமிழ்ச்செல்வன் பின்னர் மீண்டும் அதிமுக சார்பில் 2011 மற்றும் 2016 ஆம் ஆண்டு ஆண்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் தங்க தமிழ்ச்செல்வன் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அமமுகவில் இணைந்து பின் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களித்ததால் 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் தனது எம்எல்ஏ பதவியை இழந்தார் பின்னர் 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தேனி மக்களவைத் தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிட்டு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 1,44,000 வாக்குகள் மட்டும் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார் பின்னர் டிடிவி தினகரன் உடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக அமமுகவில் இருந்து விலகி கடந்த 2019 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார்.

பின்னர் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் முதல் முறையாக போடி தொகுதியில் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராக களம் இறங்கி 11 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஓ பன்னீர்செல்வத்திடம் தோல்வி அடைந்தார் பின்னர் தங்க தமிழ்ச்செல்வனுக்கு ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் அவரது பெயர் அறிவிக்கப்படவில்லை இந்நிலையில் தற்போது 2024 ஆம் ஆண்டு தேனி மக்களவைத் தொகுதியின் திமுக வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டுள்ளார் கடந்த காலங்களில் அதிமுக விசுவாசியாக அறியப்பட்ட தங்க தமிழ்ச்செல்வன் இந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவிற்கு எதிராகவும், அமமுகவுக்கு எதிராகவும் களமிறங்க உள்ளார் என குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News