பட்டுக்கோட்டையில் சிபிஎம் நிர்வாகிகளுடன் தஞ்சை திமுக வேட்பாளர் சந்திப்பு 

பட்டுக்கோட்டையில் சிபிஎம் நிர்வாகிகளுடன் தஞ்சை நாடாளுமன்ற வேட்பாளர் ச.முரசொலி சந்தித்து பேசினார்.

Update: 2024-03-26 15:25 GMT

கம்ம்யூனிஸ்ட் நிர்வாகிகள் சந்தித்த திமுக வேட்பாளர்

இந்திய நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  த

மிழகம் முழுவதும் தேர்தல் பணிகள் சூடு பிடித்துள்ள நிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி செவ்வாய்க்கிழமை காலை, பட்டுக்கோட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்தார்.  அ

வரை, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம், மூத்த தோழர் மெரினா ஆறுமுகம், மற்றும் கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வரவேற்றனர்.  வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக போட்டியிடும் தன்னை ஆதரிக்குமாறு ச.முரசொலி அப்போது கேட்டுக்கொண்டார்.

அவருடன், பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினரும் திமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளருமான கா.அண்ணாதுரை, நகரச் செயலாளர் செந்தில்குமார், பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட் மற்றும் பலர் உடன் வந்திருந்தனர்.

Tags:    

Similar News