தஞ்சாவூர் திமுக வேட்பாளர் முரசொலி கூட்டணி நிர்வாகிகளுடன் சந்திப்பு 

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி கூட்டணி கட்சியினரை பேராவூரணியில் சந்தித்து பேசினார்.

Update: 2024-03-26 14:08 GMT

கூட்டணி நிர்வாகிகளுடன் சந்திப்பு 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கில், செவ்வாய்கிழமை அன்று காலை இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன், தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ச. முரசொலி சந்தித்துப் பேசினார்.  தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.

தேர்தல் பணிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி செவ்வாய்க்கிழமை காலை பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கத்திற்கு வந்தார். 

அங்கு அவர் திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள் நகரச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவு நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.  தொ

டர்ந்து வரவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தம்மை வெற்றி பெறச் செய்ய தீவிரமாக பாடுபடுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.  அப்போது திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் பேராவூரணி நா.அசோக்குமார் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம்,

பண்ணவயல் ராஜாத்தம்பி மற்றும் காங்கிரஸ், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News