பிரச்சாரத்தை துவக்கிய தஞ்சாவூர் திமுக வேட்பாளர் முரசொலி

கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி தனது பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்.

Update: 2024-03-27 12:51 GMT

தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி தனது வேட்புமனுவை புதன்கிழமை காலை தாக்கல் செய்தார்.  அதனைத் தொடர்ந்து,  தஞ்சாவூர் பள்ளியக்ரஹாரம் பகுதியில், புதன்கிழமை மாலை 4 மணியளவில் இந்தியா கூட்டணி சார்பில், தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ச.முரசொலி தனது பிரச்சாரத்தை துவக்கினார். 

முன்னாள் ஒன்றிய நிதித் துறை இணை அமைச்சரும், தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினரும், திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான ச.சு.பழநி மாணிக்கம் தலைமை வகித்து பிரச்சார பயணத்தை துவக்கி வைத்துப் பேசினார்.  அவர் பேசுகையில், "இந்தியா கூட்டணி வேட்பாளராக, தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தம்பி ச.முரசொலி வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் நமது பகுதி மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும்.  மு.க.ஸ்டாலின்,  உதயநிதியின் கரத்தை வலுப்படுத்த, அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

அவரது வெற்றிப் பயணம் இங்கே இருந்து தொடங்கட்டும்" இவ்வாறு வாழ்த்திப் பேசினார்.  இதில், தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை.சந்திரசேகரன் எம்எல்ஏ, தஞ்சாவூர் எம்எல்ஏ டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை பாண்டியன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டச் செயலாளர் எஸ்.எம்.ஜெயினுலாபுதீன் மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், கட்சியினர் பிரச்சார பயணத்தில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News