தாராபுரம் 16வது வார்டு கவுன்சிலர் கமலக்கண்ணன் வாக்கு சேகரிப்பு

தாராபுரத்தில் இந்தியா கூட்டணி திமுக வேட்பாளர் கேள்வி பிரகாசி ஆதரித்து 16வது வார்டு கவுன்சிலர் கமலக்கண்ணன் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டார்.;

Update: 2024-03-26 06:52 GMT

 வாக்கு சேகரிப்பு

நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. ஈரோடு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் திமுக மாநில இளைஞரணி துணைச் செயலாளர் கே.இ . பிரகாஷ் போட்டியிடுகிறார். அவர் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். இதனை தொடர்ந்து வேட்பாளர்  கே.இ . பிரகாசுக்கு  தாராபுரம் நகராட்சி 16-வது வார்டு பகுதியில் மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் நகராட்சி 16-வது வார்டு கவுன்சிலருமான கமலக்கண்ணன் நேற்று மாலை 50க்கும் மேற்பட்டோர்களுடன் குப்புசாமி நகர், புஞ்சை, குளத்து தெரு ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது வாக்காளர்களுக்கு இனிப்பு மற்றும் துண்டு பிரசுரங்களை வழங்கினார். வாக்காளர்கள் ஆர்வத்துடன் நகராட்சி கவுன்சிலர் கமலக்கண்ணனுக்கு நல்ல வரவேற்பு அளித்தனர். வாக்கு சேகரிப்பின் போது வார்டு பிரதிநிதி ரவீந்திரன், முன்னாள் நகர மன்ற துணைத் தலைவர் மாரிமுத்து, மற்றும் பர்கத் நிஷா, ஜீவா, ஷாஜகான், அருண், மாரிமுத்து, பிரவீன், ராஜ், சந்திரன், கோபிநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News