தலைமறைவாக இருந்த குற்றவாளி கைது
பெரம்பலூரில் சாதிய வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவரை போலீசார் கைது செய்தனர்.;
Update: 2024-02-20 04:43 GMT
தனபால்
பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த SC/ST - வழக்கின் குற்றவாளியான தரணி கிராமம் தெற்கு தெரு பகுதியை சேர்ந்த ஜெயராமன் மகன் தனபால் 43 என்பவர் நீதிமன்ற பிணையில் வெளிவந்து பின் நீதிமன்றத்தில் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த குற்றவாளி தனபால் மீது சிறப்பு SC/ST நீதிமன்றத்தால் பிடி ஆணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி பெரம்பலூர் உட்கோட்ட துணைக் காவல் கண்காணிப்பாளர் பழனிச்சாமி வழிகாட்டுதலின்படி தனிப்படை அமைக்கப்பட்டு மேற்படி எதிரியை தேடி வந்தனர். இதன்படி பாடாலூர் காவல் ஆய்வாளர் பிரபு தலைமையிலான குழுவினர் பிப்ரவரி 19-ம் தேதி தனபாலை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்து நீதிமன்ற பிடிக்கட்டளையை நிறேவேற்றியுள்ளனர்.