திருமயம் அருகே கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் திட்டங்கள் பிரச்சாரம்!
திருமயம் அருகே தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசின் வேளாண் திட்டங்கள் விளக்கப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-28 06:34 GMT
கலை நிகழ்ச்சிகள்
பொன்னமராவதி வட்டாரத்துக்குட்பட்ட செம்பூதி மற்றும் மேல்நிலை கிராமங்களில் தெருக்கூத்து உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் அரசின் வேளாண் திட்டங்கள் விளக்கப்பட்டன. நிகழ்வை பொன்னமராவதி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ரஹ்மத் நீர் பேகம் தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை கூழையான் விடுதி மங்களநாயகி கலைக்குழுவினர் பங்கேற்று இயற்கை விவசாயம் சிறுதானியங்களின் முக்கியத்துவம் நெல் அறுவடைக்குப் பிறகு உளுந்து சாகுபடி, நுண்ணீர் பாசன திட்டம், மண்வள மேலாண்மை, மத்திய மாநில அரசுகளின் விவசாயிகளுக்கான மாநிலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நாடகம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் மூலம் விளக்கினர். ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் முருகேசன் வட்டார தொழில் நுட்பம் மேலாளர் சத்திய பாமா உதவி தொழில் நுட்ப மேலாளர் பிரசாத் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.