அரசியல் சூழலுக்கு தகுந்தபடி தான் கூட்டணி அமையும்-எடப்பாடி பழனிச்சாமி!

அரசியல் சூழலுக்கு தகுந்தபடி தான் கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

Update: 2023-12-27 13:28 GMT

 அரசியல் சூழலுக்கு தகுந்தபடி தான் கூட்டணி அமையும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர், சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்த நிலையில் விடியா திமுக அரசு எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காததால் மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதாகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கபட்டு இருந்தால் பாதிப்புகளை குறைத்து இருக்கலாம் என்றார்.

அதிமுக ஆட்சியில் வடகிழக்கு பருவமழை துவங்கும் முன்பே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகவும், பேரிடர் காலத்தில் அம்மா உணவகத்தில் உணவுகள் தயாரித்து உணவு வழங்கியதாக கூறியவர் திடீரென ஒரு லட்சம் கன அடி தண்ணீரை தாமிரபரணி ஆற்றில் திறந்து விட்ட நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணமாக துயர சம்பவங்கள் நடந்து பொருட்கள் மழை வெள்ளத்தால் சேதமடைந்தது எனவும் ஆளும் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் அசாம்பாவிதங்களை தவிர்த்து இருக்கலாம் என்றார்.

ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் திமுகவினர் கமிசனுக்காக ஆசைப்பட்டு திட்டம் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றவர் அதிமுக ஆட்சியின்போது கஜா, தானே,வர்தா புயல்கள் வந்ததாகவும் இதனால் கடுமையான சேதங்கள் ஏற்பட்ட நிலையில் போர்க்கால அடிப்படையில் பணிகள் செய்த காரணமாக இயல்பு நிலை திரும்பியது என்றவர் அப்போது புயல் பாதிப்புகளை பேரிடராக அறிவிக்க திமுகவும் அதன் கூட்டணி கட்சிகள் குரல் கொடுக்கவில்லை என்றவர் இப்போது தேர்தலை மையமாக வைத்து கூட்டணி கட்சிகள் குரல் தருவதாக கூறினார். மத்திய அரசு நிதி அளிக்க வேண்டும் என முதல்வர் கேட்டு வருகிறார் மத்திய அரசு நிதி தராவிட்டாலும், மாநில அரசு நிதியில் இருந்து செலவிட வேண்டும் எனவும் மாநில அரசு மத்திய அரசையும் மத்திய அரசு மாநில அரசையும் குறை சொல்வது கவலையளிப்பதாக தெரிவித்தவர் பொறுப்பை உணர்ந்து மத்திய மாநில அரசுகள் செயல்பட வேண்டும் என்றார்.

பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பது கட்சியின் முடிவு எனவும் கூட்டணி என்பது அரசியல் சூழலுக்கு தகுந்தபடி தான் அமையும் எனவும் திமுக தொடர்ந்து வெற்றி பெற்று கொண்டே இருந்ததா? என கேள்வி எழுப்பினார். பல தோல்விகளை திமுக சந்தித்துள்ளதாகவும் 2011 சட்டமன்ற தேர்தலில் எதிர் கட்சியாக கூட இடம் பெறவில்லை எனவும் வெற்றி தோல்வி என்பது சூழலுக்கு தகுந்தபடி மாறும் என்றார். கடந்த சட்டமன்ற தேர்தலில் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்ததாகவும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என தெரிவித்தார் ஓபிஎஸ் சிறைக்கு செல்ல தயாராகிவிட்டதாகவும் அவர் மீது பல வழக்குகள் உள்ள நிலையில் விரைவில் அவர் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் என்றவர் அந்த வழக்கில் அவருக்கு தண்டனை கிடைக்கும் என்றவர் அவரது குடும்பத்தில் அதிகமாக சொத்து சேர்த்துள்ளார் எனவும் முதலமைச்சராக இருந்த எனக்கு தெரியும் எனறவர் என் மீது பழி சுமத்தி ஓபிஎஸ் தப்பிக்க பார்ப்பதாக தெரிவித்தார்.ஒபிஎஸ் திமுகவின் பி டீம் எனவும் ஜெயலலிதாவிற்கு இரண்டு கோடி கடன் இருந்ததாக சொல்வது வெட்கக்கேடான விஷயம் எனவும் அது மோசமான வார்த்தை எனவும் ஓபிஎஸ் கட்சிக்கு இடையில் வந்தவர் எனவும் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து இருக்கிறோம் என்றவர்ப் அம்மாவிற்கு எதிராக போட்டியிட்டவருக்கு ஓபிஎஸ் ஏஜெண்டாக இருந்தார் எனவும் குற்றம் சாட்டினார்.

திமுகவினர் எவ்வளவு முயற்சி செய்தும் அதிமுகவை ஒழிக்க முடியவில்லை எனவும் ஓபிஎஸ் திமுக உடன் கூட்டணி சேர்ந்து பொய் சொல்லி ஏமாற்ற பார்க்கிறார்” எனத் தெரிவித்தார்.

Tags:    

Similar News