அனுப்பர்பாளையத்தில் அரசு அலுவலகத்திற்குள் புகுந்து திருட முயன்ற ஆசாமி

அனுப்பர்பாளையம் புதூரில் உள்ள அரசு அலுவலகத்திற்கு புகுந்து திருட முயன்ற ஆசாமி குறித்து, அனுப்பர்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-05-28 14:12 GMT

காவல் நிலையம்

திருப்பூர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள அரசு அலுவலகத்திற்குள் புகுந்து திருட முயன்ற ஆசாமி! திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூரில் அரசு நிறுவனமான மாவட்ட தொழில் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பணிகள் முடிந்ததும் வழக்கம் போல அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அலுவலகத்தை பூட்டி விட்டு சென்று விட்டனர்.

செல்வராஜ் (வயது 38) என்பவர் இரவு காவலாளியாக பணியில் இருந்தார். அப்போது நள்ளிரவில் அலுவலகத்தில் உள்ளே யாரோ நடமாடுவது போன்று சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து செல்வராஜ் அலுவலகத்தை திறந்து உள்ளே சென்றுள்ளார். இதைக் கண்ட மர்ம ஆசாமி அங்கிருந்து தப்பி வெளியே ஓடிவிட்டார்.

Advertisement

இதுகுறித்து அணுப்பர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.இதன்பேரில் போலிசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அந்த மர்ம ஆசாமி அலுவலகத்தில் உடைந்த கண்ணாடி வழியாக உள்ளே சென்றதும்,

அங்கிருந்து ஏசி மற்றும் பேட்டரியை திருடிச் செல்ல முயன்றதும் தெரிய வந்தது. இது குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News