சாதனை படைத்த மாணவனுக்கு சங்கம் நேரில் பாராட்டு
சாதனை படைத்த ஊசிகோபுரம் மாணவனுக்கு சங்கம் சார்பில் நேரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-13 09:18 GMT
மாணவனுக்கு பாராட்டு தெரிவித்த சங்கத்தினர்
திருநெல்வேலி மாவட்டம் ஊசிகோபுரம் சிஐடியு ஆட்டோ ஸ்டாண்ட் தலைவரும் மாவட்ட குழு உறுப்பினருமான பழனி என்பவரின் மகன் அரிகரன் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 493 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார்.
அந்த மாணவனை சிஐடியு அரசு போக்குவரத்து மாவட்ட தலைவர் காமராஜ்,சிஐடியு மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர் நேற்று (மே 12 இரவு நேரில் சந்தித்து மாலை அணிவித்து பாராட்டினர்.