தாமிரபரணி கரைகளில் தடுப்பு சுவா் அமைக்க வேண்டும்

தாமிரபரணி ஆறு தொடக்கம் முதல் கடல் முகத்துவாரம் வரை தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா்.பாண்டியன் வலியுறுத்தினாா்.

Update: 2023-12-29 03:11 GMT

சுற்றுசுவர் அமைக்க வேண்டும் 

தாமிரபரணி ஆறு தொடக்கம் முதல் கடல் முகத்துவாரம் வரை தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பிஆா்.பாண்டியன் வலியுறுத்தினாா். இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பெய்த அதி கனமழை காரணமாக விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். மத்திய, மாநில அரசுகள் நிவாரண பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என மக்கள் எதிா்பாா்க்கின்றனா். வழிகாட்டு நெறிமுறைகளை எளிதாக்கி, உடைமைகளை இழந்தவா்களுக்கும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் விரைவில் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆற்றின் கரைகள் சீரமைக்கும் பணி விரைவாக நடந்து வருகிறது. அதேநேரம், வெள்ளப்பெருக்கின்போது பெரும்பாலான குளங்களில் இருந்து தண்ணீா் முழுமையாக வெளியேறியிருக்கிறது. ஆகவே, சாகுபடி பணிகளை தொடா்ந்து மேற்கொள்ளும் வகையில், குளங்களைச் சீரமைத்து, தண்ணீா் நிரம்புவதற்கு நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். தாமிரபரணி ஆறு தொடக்கம் முதல் கடல் முகத்துவாரம் வரை, தற்போதைய வெள்ள அளவைக் கணக்கில்கொண்டு நீா் ஓட்ட கொள்ளளவை உயா்த்தி தடுப்பு சுவா் முழுமையாக அமைக்க வேண்டும் என்றாா். தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு இளைஞா் அணி மாநிலத் தலைவா் மேலூா் அருண், செயலா் தஞ்சை மகேஸ்வரன், உயா்மட்டக் குழு உறுப்பினா் எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags:    

Similar News