செல்போன்பேசிகொண்டிருந்த நபரின் பைக் பறிப்பு
மயிலாடுதுறை அருகே சாலையோரத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரின் பைக் பறிப்பு;
By : King 24x7 Website
Update: 2023-12-14 11:54 GMT
மயிலாடுதுறை அருகே சாலையோரத்தில் செல்போன் பேசிக் கொண்டிருந்த நபரின் பைக் பறிப்பு
மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலம் மாதிரிமங்கலம் பகுதியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர். இவர் சம்பவ தினத்தன்று மாலை தமது பைக்கில் கடலங்குடி வழியாக மயிலாடுதுறை குத்தாலம் சாலைக்குச் சென்றுகொண்டிருந்தார். கடலங்குடி பகுதியில் செல்லும் காவிரி ஆற்றின் பாலத்திற்கு வந்தபோது பைக்கை நிறுத்திவிட்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார், அந்த நேரத்தில் அங்கே ஒரே பைக்கில் வந்த 3 மர்ம நபர்கள் ராஜேந்திரனை மிரட்டிவிட்டு அவரது பைக்கை எடுத்துச் சென்றுவிட்டனர். கூச்சல் போட்டும் ஆள் நடமாட்டம் இல்லாதததால் அவர்களைப்பிடிக்க முடியவில்லை, இதுகுறித்து ராஜேந்திரன் குத்தாலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவுசெய்து பல்வேறு பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா உதவியுடன் தேடிவருகின்றனர்.