அருமனை அருகே தீயில் கருகி உயிரிழந்த இளம்பெண் உடல் தகனம்
அருமனை அருகே தீயில் கருகி உயிரிழந்த இளம்பெண் உடல் தகனம் செய்யப்பட்டது.;
By : King 24X7 News (B)
Update: 2024-06-17 08:53 GMT
இறந்த பெண்
அருமனை அருகே மாங்கோடு கல்லறமூ லைவிளை பகுதியை சேர்ந்த ஷானு என்ப வரது மனைவி தீபா. இவர்கடந்த 12 ம் தேதி இரவு வீட்டில் தீயில் கருகி உயிரிழந்தார். ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீபா உடல் பிரேத பரிசோ தனை செய்யப்பட்டது.
தீபாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி தீபாவின் பெற்றோர் சகோதரி திவ்யா மற்றும் உறவினர்கள் மாவட்ட எஸ்.பி.க்கு புகார் தெரிவித்தனர். ஆர்.டி.ஓ விசாரணை மேற்கொள்ளப்படு மென உறுதியளிக் கப்பட்டது.இந்தநிலையில் தீபாவின் தாயார் வெளிநாட்டில் இருந்து பளுகலில் உள்ள வீட்டிற்கு வந்தார்.
இதன்பின்னர் தீபா வின் உடல் ஆம்புலன்சில் பளுகல் அருகே பொன்னறக்கவிளையில் தாயார் வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு உடல் தகனம் செய்யப்பட்டது.