உடல் உறுப்புகளை தானம் செய்தவரின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்
உடல் உறுப்பு தானத்தின் இந்தியாவின் முதல் மாநிலமாக தமிழகம் இருந்து வருகிறது.இதனையடுத்து மூளைச்சாவு நிலையை அடைந்த்தையடுத்து, இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகேயுள்ள புங்கம்பாடி , நத்தக்காட்டுபாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியம்மாள் என்பவர் மூளைச்சாவு அடைந்ததையொட்டி அவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. உறுப்பு தானம் செய்தவரின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தும் வகையில் ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் சதீஷ்குமார் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.