எல்லையில் பிளாஸ்டிக் குப்பை அதிக அளவில் குவிந்து சீர்கேடு

வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு அருணாச்சலம் நகர் எல்லையில் பிளாஸ்டிக் குப்பை அதிக அளவில் குவிந்து சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

Update: 2024-02-05 03:46 GMT


வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு அருணாச்சலம் நகர் எல்லையில் பிளாஸ்டிக் குப்பை அதிக அளவில் குவிந்து சீர்கேடு ஏற்பட்டுள்ளது.


வளசரவாக்கம் மண்டலம், 150வது வார்டு அருணாச்சலம் நகரில், பாரதி சாலை உள்ளது. இச்சாலை சென்னை மாநகராட்சி மற்றும் வானகரம் ஊராட்சியின் எல்லைப் பகுதியில் உள்ளது. போரூர், காரம்பாக்கம் பகுதிகளில் இருந்து வானகரம் மற்றும் போரூர் சுங்கச்சாவடி செல்ல, வாகன ஓட்டிகள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.

இச்சாலையில், வானகரம் ஊராட்சி எல்லையில், பிளாஸ்டிக் மற்றும் இதர குப்பை மற்றும் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ளன. இந்த குப்பை முறையாக அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடும் நிலவுகிறது. அத்துடன் பிளாஸ்டிக் குப்பை காற்றில் பறப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

சில சமூக விரோதிகள், இந்த பிளாஸ்டிக் குப்பையை எரிப்பதால், பகுதிமக்கள் மூச்சு திணறலால் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி, ஊராட்சி எல்லை தவிர, வானகரம் ஊராட்சிக்கு உட்பட்ட பல சாலைகளில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்துள்ளன. எனவே, குவிக்கப்பட்டுள்ள குப்பையை முறையாக அகற்ற, அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News