வாலியில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு
திண்டுக்கல்லில் தண்ணீர் வாளியில் விழுந்து சிறுவன் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Update: 2024-01-13 08:58 GMT
திண்டுக்கல், நாகல் புதூர் ஐந்தாவது சந்து பகுதியைச் சேர்ந்தவர் ரங்கநாதன்.இவருக்கு ஐந்து வயதில் ஒரு மகளும், இரண்டு வயதில் ஒரு மகனும் உள்ளனர். இன்று காலை புவனேஸ்வரி சமையல் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது தூங்கிக் கொண்டிருந்த இரண்டு வயது சிறுவன் அரை தூக்கத்தில் எழுந்த படி பாத்ரூம் சென்றான். அங்கு தண்ணீர் வாலியில் தவறி விழுந்து மூச்சு திணறி அலறினான் .சிறுவனின் சத்தம் கேட்டு அவரது தாய் ஓடி வந்தார். பின்னர் சிறுமுனை தூக்கிக்கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர் ஆனால் மருத்துவமனை வரும் வழியிலேயே சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர.