திருவேற்காடு கூவம் ஆற்றின் மீது 2 ஆண்டாக நடக்கும் பாலப்பணி

திருவேற்காடு கூவம் ஆற்றின் மீது 2 ஆண்டாக நடக்கும் பாலப் பணிகள் தடைபட்டுள்ளன.

Update: 2024-03-11 15:48 GMT

பாலப்பணி

2021ம் ஆண்டு, 16 கோடி ரூபாய் மதிப்பில், புதிய உயர்மட்ட பாலம் கட்ட முடிவாகி பணியும் துவங்கியது. ஆனால் சட்டபை தேர்தல், கொரோனா ஊரடங்கு ஆகியவற்றால், துவங்கிய வேகத்தில் பணி நிறுத்தப்பட்டது. பின் மண் பரிசோதனை உள்ளிட்ட பணிகள் மீண்டும் துவங்கின. ஆனால் நவம்பர் முதல் டிசம்பர் வரை நீடித்த வடகிழக்கு பருவ மழையால் ஆற்றில் பாய்ந்த வெள்ளம் காரணமாக மீண்டும் பணி நிறுத்தப்பட்டது. அதன்பின், 2022ம் ஜனவரியில் மீண்டும் கட்டுமான பணிகள் துவங்கின. இந்த உயர்மட்ட பாலம், 350 நீளத்தில், 59 அடி அகலத்தில், நடை மேடையுடன் அமைக்க திட்டமிடப்பட்டது. மேலும், ஆவடி-பூந்தமல்லி சாலையில் இருந்து, 345 அடி நீள இணைப்பு சாலையும், திருவேற்காடில் இருந்து 245 அடி நீள இணைப்பு சாலையும், புதிய பாலத்துடன் இணைக்கும் வகையில் பாலம் வடிவமைக்கப்பட்டது. பணிகள் துவங்கிய போது, 2022ம் ஆண்டு இறுதிக்குள் பணிகள் முடிந்து 2023ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என, நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்தனர். ஆனால், 80 சதவீத பணிகள் மட்டுமே முடிந்துள்ளன. பருவ மழை, பணியாளர் பற்றாக்குறை, கட்டுமான பொருட்களின் விலை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களால் பணிகள் தடைபட்டுள்ளன. இப்பிரச்னைகளால் திருவேற்காடு, காடுவெட்டி, வீரராகவபுரம் சுற்றுவட்டார பகுதியினரும், பக்தர்களும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியின்றி அவதிப்படுகின்றனர்.
Tags:    

Similar News