சொத்துக்காக அண்ணன் மகனை கொலை செய்த தம்பி

சொத்துக்காக அண்ணன் மகனை கொலை செய்து பவானி ஆற்றில் வீசிய தம்பியை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2024-02-03 06:49 GMT

சொத்துக்காக அண்ணன் மகனை கொலை செய்து பவானி ஆற்றில் வீசிய தம்பியை போலீசார் கைது செய்தனர். 

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெருந்தலையூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தலை, கை, கால்கள் தனி தானியக வெட்டப்பட்ட நிலையில் சடலம் மிதந்து வருவதை பார்த்து அங்கிருந்த மக்கள் அளித்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு சென்ற கவுந்தப்பாடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருந்தனர் . இந்த நிலையில் ஆப்பக்கூடல் அருகே உள்ள கூத்தம்பூண்டியை சேர்ந்த முனுசாமி மகன் சுரேஷ்(43) என்பவரும் சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன் வேலைக்கு சென்றவர் காணாமல் போனது தெரிய வந்தது. காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சொத்துக்காக அவரது சித்தப்பா அய்யாசாமி , சுரேஷிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

Advertisement

சம்பத்தன்று மது போதையில் இருந்த சுரேசை, அய்யாசாமி தாக்கி கொலை செய்து விட்டு தலை, கை, கால்களை துண்டு துண்டாக வெட்டி உள்ளார்.உடலில் வயிற்று பாகத்தை கத்தியால் கிழித்து உள்ளார். ஒவ்வொரு பாகத்தையும் அருகில் இருந்த பவானி ஆற்றில் வீசிச்சென்றதாக கூறப்படுகிறது. அதில் சுரேஷை கொலை செய்தது அவர் தான் என தெரிய வந்ததை தொடர்ந்து,அவரை கைது செய்து கோபியில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News