அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு இன்று விசாரணை
அமைச்சர் பொன்முடிக்கு எதிரான செம்மண் குவாரி வழக்கில் நேற்று சாட்சிகள் ஆஜராகாததால் விசாரணை இன்று நடக்கிறது.;
Update: 2024-06-19 03:01 GMT
அமைச்சர் பொன்முடி
விழுப்புரம் மாவட்டம், பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உட்பட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தம் உள்ள 67 சாட்சிகளில் இதுவரை 33 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 26 பேர் பிறழ் சாட்சி அளித்துள்ளனர். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. வழக்கின் விசாரணையை இன்று (ஜூன் 19) ஒத்தி வைத்து நீதிபதி (பொறுப்பு) இளவரசன் உத்தரவிட்டார்.