நண்பனை குத்திய வழக்கு; தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை.

நண்பனை குத்திய வழக்கு; தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.;

Update: 2023-12-01 14:21 GMT

நண்பனை குத்திய வழக்கு; தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

குமரி மாவட்டம் மண்டைக்காடு அருகே உள்ள பருத்திவிளை  என்ற இடத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் (51), மகேஷ் (49). கூலித் தொழிலாளிகளான  இருவரும் நண்பர்கள் ஆவர்கள். கடந்த 2002 ஆம் ஆண்டு மண்டைக்காட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்திற்கு இருவரும் சென்று இருந்தனர். அங்கு சிலருடன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.      அப்போது திடீரென இருவருக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் காய்கறி வெட்ட வைத்திருந்த கத்தியை மகேஸ் எடுத்து, கிருஷ்ணனை சரமாரியாக குத்தினார்.

Advertisement

இதில் காயமடைந்த கிருஷ்ணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இந்த சம்பவம் தொடர்பாக மண்டைக்காடு போலீசார் மகேஷ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர்.       

இந்த வழக்கு இரணியல் சார்பு  நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று சார்பு  நீதிமன்ற நீதிபதி செல்லப்பாண்டி தீர்ப்பளித்தார். தீர்ப்பில் மகேஷிற்கு 10 வருடம் சிறை தண்டனையும் 10 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பி. செந்தில் மூர்த்தி ஆஜரானார்.

Tags:    

Similar News